சினிமா செய்திகள்

ஒரு பிரச்சனை... என்ன பிரச்சனை... வெளியானது TTT டீசர்

Published On 2025-10-17 11:36 IST   |   Update On 2025-10-17 11:36:00 IST
  • இப்படத்தை இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார்.
  • ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.

இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கல்யாணத்தில் நடக்க உள்ள பிரச்சனையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதை டீசரில் சொல்லப்பட்டுள்ளது.

இதோ 'தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வேடிக்கையான மேக்ஸ் டீஸர்! குழப்பத்தை அனுபவியுங்கள்... என்று நடிகர் கார்த்தி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 


Full View


Tags:    

Similar News