சினிமா செய்திகள்

கால்பந்து போட்டியை நேரில் ரசித்து பார்த்த மம்முட்டி-மோகன்லால்: வைரலாகும் புகைப்படம்

Published On 2022-12-19 07:24 GMT   |   Update On 2022-12-19 07:24 GMT
  • உலக கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் நேற்று அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதின.
  • இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தார் நாட்டில் நேற்று இரவு நடந்தது. அர்ஜென்டினா-பிரான்சு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தை ஏராளமானோர் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் பார்த்து ரசித்தனர்.

 

மம்முட்டி - மோகன்லால்

அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற இந்த ஆட்டத்தை நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் நேற்று நேரடியாக பார்த்துள்ளனர். இது தொடர்பன புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News