சினிமா செய்திகள்
null

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இரண்டு மணிநேர ஆலோசனை நடத்திய விஜய்

Published On 2023-07-11 15:18 IST   |   Update On 2023-07-11 17:49:00 IST
  • நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
  • இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தடைந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில், 234 தொகுதி நிர்வாகிகளுடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தார். இதன் பின்னர், விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Tags:    

Similar News