சினிமா செய்திகள்

வாரிசு

null

தன் பாடலை ரீமிக்ஸ் செய்யும் விஜய்

Update: 2022-06-28 12:00 GMT
  • விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் இயக்குனர் வம்சி. விஜய் நடிப்பில் குடும்பக்கதையுள்ள படம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்தப் படத்தை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

யூத் - விஜய்

அண்ணன், தங்கை உறவுகளின் பாசப் போராட்டக் களத்தை விவரிக்கும் இந்தக் கதை குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையை விஜய்க்கு அதிகரிக்கும் என்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் முக்கியமான இடத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் விஜய் படத்தின் பாடலையே ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தெரிகிறது. அதன்படி 2002-ஆம் ஆண்டு வெளியான யூத் படத்தில் இடம்பெற்று ரசிகர்களின் மனதை கொள்ளையடிதத "ஆல்தோட்ட பூபதி நானடா" என்ற பாடலை வாரிசு படத்தில் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பாடலை மணிஷர்மா இசையமைத்திருந்ததால் அவரிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News