விடுதலை
காற்றில் வரும் புழுதியப்போல்.. நம்ம தூத்துகிற ஊரு இது.. கவனம் ஈர்க்கும் விடுதலை பட பாடல்
- வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'விடுதலை’.
- இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விடுதலை
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ஒன்னோட நடந்தா' இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
விடுதலை
அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.