சினிமா செய்திகள்

கிஷோர்

வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Published On 2022-11-22 11:00 GMT   |   Update On 2022-11-22 11:00 GMT
  • சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
  • இந்த தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.


கிஷோர்

இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.


கிஷோர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.

Tags:    

Similar News