சினிமா செய்திகள்

'வான் மூன்று' டைட்டில் வைக்க காரணம் இதுதான்- இயக்குனர் பேச்சு

Published On 2023-08-08 10:05 GMT   |   Update On 2023-08-08 10:05 GMT
  • ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’.
  • இப்படம் வருகிற 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வான் மூன்று'. சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபீல் குட் லவ் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதில், இயக்குனர் முருகேஷ் பேசியதாவது, "வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்த கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்த கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லோரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து ஒத்து கொள்ள வைத்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஃபீல் குட் படமாக உருவாக்கினேன்" என்று பேசினார்.


நடிகை லீலா தாம்சன் பேசியதாவது, "இயக்குனர் இந்த கதை சொன்னபோது எனக்கு முதலில் புரியவில்லை. நேரில் சந்தித்து கதை சொன்ன போதுதான் நான் ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தில் புதியவர்கள் போலவே அனுபவம் வாய்ந்தவர்களும் வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடனும் டெல்லி கணேஷ் சாருடனும் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி" என்றார்.


நடிகர் ஆதித்யா பாஸ்கர் பேசியதாவது, "இந்த கதை கேட்டபோது நான் எதிர்பார்த்தபடி, என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதுவும் இல்லாமல் இந்த அணியினர் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால் தைரியமாக ஒத்துக்கொண்டேன்" என்றார்.

Tags:    

Similar News