சினிமா செய்திகள்

புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா.. 9 நாடுகளை சேர்ந்த 32 படங்கள் திரையிடப்படுகிறது

Published On 2023-08-05 06:13 GMT   |   Update On 2023-08-05 06:13 GMT
  • 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.
  • நாளை வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது.

புதுவை திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சே, மும்பை மத்திய திரைப்பட பிரிவு, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், தமிழ்நாடு முற்பாக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் இணைந்து 11-வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட திருவிழா அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் தொடங்கியது.


விழாவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழக பொது மேலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சங்கம் ஆதவன்தீட்சண்யா, எழுத்தாளர் தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் திரைப்பட குறிப்பு புத்தகத்தை அலையன்ஸ் பிரான்சே, இயக்குனர் லொரேன்ஜலிகு வெளியிட்டார். நாளை (6-ந்தேதி) வரை நடைபெறும் இவ்விழாவில் விருது பெற்ற சர்வதேச அளவிலான சிறந்த படங்கள் திரையிடப்படுகிறது. 9 நாடுகளை சேர்ந்த படங்களுடன் 32 படங்கள் திரையிடப்படுகிறது. தமிழகம், புதுவையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளம் படைப்பாளிகளின் இலக்கிய படைப்புகளும் இடம்பெறுகிறது.

Tags:    

Similar News