சினிமா செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் செய்யும் உதவி.. குவியும் பாராட்டு

Published On 2023-07-10 13:45 IST   |   Update On 2023-07-10 13:45:00 IST
  • நடிகர் சூர்யா ’கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ரசிகர்கள் அவர்களின் நற்பணி மன்றம் சார்பாக பலவிதமான உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இரத்ததானம், அன்னதானம், மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற பல செயல்களை செய்து வருகின்றனர்.



அந்த வகையில் நடிகர் சூர்யா வருகிற 23-ஆம் தேதி தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரசிகர்கள் பழனி அருகே உள்ள குட்டிக்கரடு கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினருக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை பதிவு செய்ய இலவசமாக முகாம் நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சாலையோர வாசிகளுக்கு ஒருமாத காலமாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உணவும் வழங்கி வருகின்றனர்.


நடிகர் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News