சினிமா செய்திகள்

சத்யராஜ்

கமல் பாணியை பின்பற்றிய சிபி சத்யராஜ்.. நெகிழ்ந்த இயக்குனர்..

Update: 2022-06-30 07:59 GMT
  • இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் மாயோன்.
  • மாயோன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'.

இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


கிஷோர் - சிபி சத்யராஜ்

இந்நிலையில், 'மாயோன்' வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ், மாயோன் திரைப்படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவிற்கு சிறப்பு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News