சினிமா செய்திகள்

ஜெயிலர்

ஜெயிலர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்

Update: 2022-06-30 07:45 GMT
  • ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.
  • அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். "ஜெயிலர்" என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

ஜெயிலர்

இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பில் தற்போது மலையாளத்தில் புதிய படம் ஒன்று தொடங்கி உள்ளதாகவும், இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாகவும் கூறப்படுகிறது. தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை மலையாளத்தில் வெளியிடும் பொழுது அதற்கு சில தலைப்பு சிக்கல் வரலாம் என தெரிகிறது. இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மலையாளத்தில் வேறு தலைப்பில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News