சினிமா செய்திகள்

ரஜினி - மீனா

மீனா கணவர் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி

Update: 2022-06-29 07:06 GMT
  • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
  • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

ரஜினி

நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் எஜமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News