சினிமா செய்திகள்
ராகவ் சத்தா -பரினிதி சோப்ரா
null
பரினிதி சோப்ரா-ராகவ் சத்தா திருமண ஏற்பாடுகள் தீவிரம்
- பரினிதி சோப்ரா -ராகவ் சத்தாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
நடிகை பரினிதி சோப்ரா, ராகவ் சத்தா இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் கரண் ஜோகர்,சானியா மிர்சா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட இருக்கின்றன. இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
ராகவ் சத்தா -பரினிதி சோப்ரா
இந்த திருமண நிகழ்வை வழக்கம்போல் பிரபலமான ஓடிடி தளம் ஒளிபரப்ப உரிமம் கேட்டு வருகிறது. ஆனால் பரினிதி சோப்ரா தரப்பில் நண்பர்களுக்கு பலத்த கெடுபிடிகளை போடநேருமே என்று யோசிப்பதாக கூறப்படுகிறது. நீண்டநாள் காதலர்கள் திருமணத்தில் இணைவதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.