நித்யா மேனன்
null
திருமணத்திற்கு முன்பு கர்ப்பம்? புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குழப்பிய நித்யா மேனன்
- வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நித்யா மேனன்.
- தற்போது நித்யா மேனன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.
நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவர் நடித்த தேன் மொழி கதாப்பாத்திரன் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது 'தி அயன் லேடி' என்ற படத்தில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
நேற்று நித்யா மேனன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பது போன்று இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நித்யா மேனன்
இந்நிலையில் நித்யா மேனன், தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் புகைப்படத்தையே அவர் பகிர்ந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.