சினிமா செய்திகள்

நஞ்சம்மா

லண்டன் நகரில் வலம் வரும் நஞ்சம்மா.. பாராட்டும் ரசிகர்கள்..

Published On 2022-10-08 17:00 IST   |   Update On 2022-10-08 17:00:00 IST
  • 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார் நஞ்சம்மா.
  • இவர் தற்போது லண்டனில் உலாவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர்.


நஞ்சம்மா

அந்த படத்தில் இவர் 'கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்' என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இந்த நிலையில் மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது.

இந்த நிலையில் அவரை லண்டனில் உள்ள லிவர்பூலில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க அங்குள்ள அமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நஞ்சம்மா, டெல்லியில் விருது வாங்கிய கையோடு விமானத்தில் லண்டன் பறந்தார்.


பழனிசாமி - நஞ்சம்மா

லிவர்பூல் நகரில் தங்கியுள்ள அவர் அங்குள்ள தெருக்களில் உற்சாகமாக வலம் வரும் காட்சிகளை அவருடன் சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்தனர். பின்னர் அந்த காட்சிகளை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. நஞ்சம்மா லண்டன் வீதிகளில் நடைபோடும் காட்சிகளை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News