சினிமா செய்திகள்

அனிருத்

null

அனிருத்தின் பிரம்மாண்ட இசை விருந்து.. ரசிகர்களை கவரும் விளம்பரங்கள்..

Published On 2022-10-19 19:52 IST   |   Update On 2022-10-19 19:54:00 IST
  • இசையமைப்பாளர் அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி.
  • 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' நிகழ்ச்சி அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

தனுஷ் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


அனிருத்

தற்போது இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. தனது 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' எனும் நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


மெட்ரோ ரயில் விளம்பரம்

இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து வருகின்றது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் இசையமைப்பாளர் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


கார் ஹாரன் விளம்பரம்

ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், அதன் உள்ளேயும் அனிருத் இசை நிகழ்வு குறித்த படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் "டிப்பம் டப்பம்" பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' நிகழ்ச்சி அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

Tags:    

Similar News