சினிமா செய்திகள்

கமல்ஹாசன்

கமல்ஹாசனின் புதிய படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தம்?

Published On 2022-12-08 08:59 GMT   |   Update On 2022-12-08 08:59 GMT
  • நடிகர் கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் -2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இவர் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், 'இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மகேஷ் நாராயணன்

இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது. இப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனவும் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மகேஷ் நாராயணன் - கமல்ஹாசன் இணைய இருந்த படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News