சினிமா செய்திகள்

செல்லோ சோ

ஆஸ்கர் விருது வழங்கும் விழா.. இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 'செல்லோ சோ'

Published On 2022-09-20 14:44 GMT   |   Update On 2022-09-20 14:44 GMT
  • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
  • இதில் இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ சோ' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.


செல்லோ சோ

அந்தவகையில் இந்தியா சார்பில் 2023 - ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக குஜராத்திப் படமான 'செல்லோ சோ' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேன் நளின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


செல்லோ சோ

இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் மற்றும் சினிமா மீதான அவனது காதலைச் சுற்றி நகரும் திரைப்படமாகும். இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News