சினிமா செய்திகள்

அர்த்தனா பினு

null

சொந்த மகள் வீட்டில் சுவர் ஏறி குதித்த நடிகர்.. வேதனையில் பிரபல நடிகை

Published On 2023-07-08 13:47 IST   |   Update On 2023-07-08 13:58:00 IST
  • 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் அர்த்தனா பினு.
  • இவர் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

மலையாள திரையுலகின் பிரபல நடிகையான அர்த்தனா பினு, தமிழில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தொடர்ந்து 'செம', 'வெண்ணிலா கபடிக்குழு -2' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தந்தை விஜயகுமார் மலையாள திரையுலகில் நடிகராக வலம் வருகிறார்.


விஜயகுமார்- அர்த்தனா பினு

விஜயகுமாருக்கும் அர்த்தனா பினுவின் தயாருக்கும் விவாகரத்தாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அர்த்தனா பினு தனது தயாருடன் கேரளாவில் வசித்து வருகிறார். இதையடுத்து தந்தை விஜயகுமார் தொடர்ந்து அர்த்தனா பினுவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்குமார் கேரளாவில் உள்ள அர்த்தனா பினுவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். வீடு உட்பக்கமாக பூட்டியிருந்ததும் ஜன்னல் வழியாக அர்த்தனா பினு, அவரது தங்கை, தாய் மற்றும் பாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் வந்த வழியே சுவர் ஏறி குதித்து சென்றுள்ளார். தந்தை சுவர் ஏறி குதித்து செல்லும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அர்த்தனா பினு தன் அனுபவிக்கும் வேதனையையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News