சினிமா செய்திகள்

நந்தமுரி தாரக ரத்னா

null

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா காலமானார்

Published On 2023-02-19 10:12 IST   |   Update On 2023-02-19 10:25:00 IST
  • பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா, அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
  • பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தமுரி தாரக ரத்னா நேற்று காலமானார்.

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரக ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரக ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

நந்தமுரி தாரக ரத்னா


இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவர சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.


நந்தமுரி தாரக ரத்னா


39 வயதாகும் தாரகா ரத்னா, 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News