சினிமா செய்திகள்

ஆலன் ஆர்கின் 

ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்

Published On 2023-07-01 11:12 IST   |   Update On 2023-07-01 11:12:00 IST
  • பாலிவுட்டின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் ஆலன் ஆர்கின்.
  • இவர் "லிட்டில் மிஸ் சன்ஷைன்" என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது வென்றார்.

பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆலன் ஆர்கின் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான "லிட்டில் மிஸ் சன்ஷைன்" என்ற திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.

அதுமட்டுமல்லாமல், 1963-ஆம் ஆண்டு 'என்டர் லாபிங்' என்ற படத்திற்காக டோனி விருதை வென்றார். தொடர்ந்து, 1968-ஆம் ஆண்டு 'லிட்டில் மர்டர்ஸ்' திரைப்படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதையும் வென்றார்.

சமீபத்தில், நெட்பிளிக் ஓடிடி தளத்தில் வெளியான 'தி கோமின்ஸ்கை மெத்தட்' வெப் தொடரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்காக ஆலன் ஆர்கின், எம்மி, கோல்டன் மற்றும் எஸ்.ஏ.ஜி போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், 89 வயதான ஆலன் ஆர்கின் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் மறைவை அவரது மகன்களான ஆடம், மேத்யூ மற்றும் அந்தோணி உறுதிப்படுத்தியுள்ளனர். பன்முகத்தன்மைக் கொண்ட ஆலன் ஆர்கின் மறைந்த செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News