சினிமா செய்திகள்

சுந்தர் சி

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் சுந்தர்.சி

Update: 2022-12-07 10:02 GMT
  • தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் சுந்தர் சி.
  • இவர் தற்போது கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.


டாக்டர் பட்டம் பெற்ற இயக்குனர் சுந்தர் சி

சமீபத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான 'காபி வித் காதல்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி -க்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வழங்கினார். இது தொடர்பான வீடியோவை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Tags:    

Similar News