சினிமா செய்திகள்

வாத்தி

இணையத்தை கலக்கும் வாத்தி படத்தின் முதல் பாடல்

Published On 2022-11-10 18:44 IST   |   Update On 2022-11-10 18:44:00 IST
  • தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'.
  • இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

 

வாத்தி

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

 

தனுஷ் - வெங்கி அட்லூரி

இந்நிலையில் அறிவித்தபடி 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடலான 'வா வாத்தி' பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுத பாடகர் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். காதல் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News