சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 6

நான் என்ன பண்ணிட்டேனு இங்க உட்கார வச்சிருக்காங்க.. பரபரப்பான பிக்பாஸ் வீடு..

Published On 2022-10-30 17:04 IST   |   Update On 2022-10-30 17:04:00 IST
  • பிக்பாஸ் 6-வது சீசனின் நேற்றைய நிகழ்ச்சியில் தனலட்சுமி எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.
  • இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற பதற்றத்துடன் போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


பிக்பாஸ் சீசன் 6

இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது ஷெரினாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்கு தனலட்சுமி தான் காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து நேற்று இது போட்டினால் ஏற்பட்ட காயம் இதற்கு தனலட்சுமி காரணம் இல்லை என்று கமல்ஹாசன் குறும்படத்தின் மூலம் நிரூபித்தார்.


பிக்பாஸ் சீசன் 6

இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் அசீம், அசல், மகேஸ்வரி ஆகிய மூன்று பேரில் யார் காப்பாற்றாப்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு மகேஸ்வரி நான் வெளியில் போக மாட்டேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது கூறுகிறார். நான் தான் தப்பு பண்ணிருக்கேன் அப்படினா மக்களுடைய தீர்ப்பு என்னவோ அதை நான் ஏத்துக்குறேன் என்று அசீம் கூறினார்.


பிக்பாஸ் சீசன் 6

நான் என்ன பண்ணிட்டேனு என்னைய இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு தெரியல அப்படி அசல் சொல்கிறார். இறுதியாக நிவாஷினியிடம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கேட்கிறார் அதற்கு அசல் இருப்பாரு இருக்கனும் என்று நிவாஷினி கூறுகிறார். எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று இந்த புரோமோ முடிவடைகிறது.



Full View


Tags:    

Similar News