சினிமா செய்திகள்

தாடி பாலாஜி

விரைவில் அரசியலில் குதிக்கும் நடிகர் தாடி பாலாஜி!

Published On 2023-05-12 15:35 IST   |   Update On 2023-05-12 15:35:00 IST
  • தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தாடி பாலாஜி.
  • இவர் சின்னத்திரைப் போல வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.


தாடி பாலாஜி

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறியதாவது, லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்று கூறினேன். அதன்படி நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டேன். அவரது கல்விக்கான சிறிய உதவிகளை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளேன். தமிழக அரசும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை கொண்டு வருகிறார்கள்.

இந்த வாய்ப்பினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நான் அரசியலுக்கு வருவேன், வந்தால் நல்ல விஷயங்கள் பல செய்வேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஆசை இல்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் நான் வேலை செய்ய தயாராகவுள்ளேன் என்று கூறினார்.

Tags:    

Similar News