சினிமா செய்திகள்

சூரி

நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு.. நீதிமன்றம் புதிய உத்தரவு..

Update: 2022-11-26 06:41 GMT
  • நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது.
  • இது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


சூரி

நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். சமீபத்தில் 4-வது முறையாக நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது.

இதைத்தொடர்ந்து, நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை டிசம்பர் மாதம் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Tags:    

Similar News