சினிமா செய்திகள்

விக்னேஷ் காந்த் - சிவகார்த்திகேயன்

null

பிரபல நடிகர் திருமணம்.. சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து..

Published On 2022-09-08 12:04 GMT   |   Update On 2022-09-08 12:42 GMT
  • பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த்.
  • இவரது திருமணம் திருச்சியில் நடைபெற்றது.

இணையதள தொகுப்பாளரான விக்னேஷ் காந்த் சின்னத்திரை தொகுப்பாளராகி பின்னர் நகைச்சுவை நடிகராக சினிமாத்துறையில் அறிமுகமானார். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில பாடல்களையும் எழுதியுள்ளார்.


விக்னேஷ் காந்த் - ராசாத்தி

விக்னேஷ் காந்துக்கும் என்ஜினீயரிங் பட்டதாரியான ராசாத்தி என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் திருச்சியில் நேற்று நடந்துள்ளது. திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஞானசம்பந்தம் உட்பட பலர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


இந்நிலையில், திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நடிகர் விக்னேஷ் காந்த் வெளியிட்டு உள்ளார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News