சினிமா செய்திகள்

கோவா திரைப்பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி இந்திய திரைப்பட ஆளுமை விருதை பெற்றுக் கொண்டார்

Published On 2022-11-29 07:24 GMT   |   Update On 2022-11-29 07:24 GMT
  • தெலுங்கு திரையுலகில் கடந்த 1978-ம் ஆண்டு ‘புனதிரல்லு’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிரஞ்சீவி.
  • இவருக்கு சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் விருது வழங்கினார்.

தெலுங்கு திரையுலகில் கடந்த 1978-ம் ஆண்டு 'புனதிரல்லு' என்ற படம் மூலம் அறிமுகமான நடிகர் சிரஞ்சீவி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பயணித்து 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் திரைப்பட உலகுக்கு ஆற்றிய பங்களிப்பு மற்றும் சமூக, கலாசார, கலைப்பணிகளுக்காக இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை கோவாவில் கடந்த 20-ந்தேதி தொடங்கிய 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் வெளியிட்டார்.

 

இந்த நிலையில் சிரஞ்சீவிக்கு கோவா விழாவில் நேற்று விருது வழங்கப்பட்டது. விருதை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணை மந்திரி எல்.முருகன் முன்னிலையில் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் வழங்கினார். விருதை பெற்றுக்கொண்ட சிரஞ்சீவி, மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தன்னுடைய பெற்றோருக்கும், தெலுங்கு திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்தார். திரைப்படத்தொழிலுக்கு தன் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Tags:    

Similar News