சினிமா செய்திகள்
null

பிரபல நகைச்சுவை நடிகர் பவா லட்சுமணன் கால் கட்டை விரல் அகற்றம்

Published On 2023-06-15 09:46 IST   |   Update On 2023-06-15 10:09:00 IST
  • மாயி, ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, காதல் சடுகுடு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பவா லட்சுமணன்.
  • இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பவா லட்சுமணன். இவர் மாயி, ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, காதல் சடுகுடு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறிப்பாக மாயி படத்தில், "வா மா மின்னல்" என்று இவர் பேசிய வசனம் இன்றுவரை பலரின் நினைவுகளில் நிற்கிகிறது.


பவா லட்சுமணன்

சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன், ஐந்து வருடங்களாக பெயிண்டர் வேலை செய்து வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பவா லட்சுமணன், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News