சினிமா செய்திகள்

ராம்நாத் பழனிக்குமார் - தயாரிப்பாளர் திருமதி சசிகுமார்

ஆதார் பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர்

Update: 2022-09-29 11:15 GMT
  • கருணாஸ் நடிப்பில் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஆதார்.
  • இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' திரைப்படம், சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

 

ஆதார் படக்குழு

இந்நிலையில் 'ஆதார்' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் இப்படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், இயக்குனர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

Tags:    

Similar News