சினிமா செய்திகள்

எஸ்.எஸ் ராஜமௌலியின் Baahubali: The Epic டீசர் விரைவில்...

Published On 2025-08-10 17:19 IST   |   Update On 2025-08-10 17:19:00 IST
  • மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் “ப்ரீ-லுக்” போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
  • இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்,

இன்டர்நேஷனல் சென்சேஷன் எஸ்.எஸ்.ராஜமெளலி, மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியிட்ட SSMB29-ன் "ப்ரீ-லுக்" போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து, முழு லுக் எப்படி இருக்கும் என்ற யூகங்களும் பேச்சுகளும் ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்து வருகின்றன. படக்குழுவினர், முழு லுக் நவம்பர் 2025-ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிரபாஸ் ரசிகர்கள் பாகுபலி பிராஞ்சைஸின் புதிய ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். "Baahubali: The Epic" என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய பதிப்பில், கூடுதல் காட்சிகள், நீளமான ரன்டைம், சில சர்ப்ரைஸ்களும் இருப்பதாக பேசப்படுகிறது.

இந்த பாகுபலி:தி எபிக் வெர்ஷனில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகத்தையும் ஒன்றாக்கி சில காட்சிகளை நீக்கி ஒரே பாகமாக வெளியிட இருக்கின்றனர்.

சமீபத்திய தகவலின்படி, Baahubali: The Epic-ன் டீசர், 2025 ஆகஸ்ட் 14 முதல் வெளியாகும் War 2 மற்றும் Coolie படங்களுடன் திரையரங்குகளில் திரையிடப்படலாம் என கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்,

இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். புதிய பதிப்பு 2025 அக்டோபர் 31-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளது. 

Tags:    

Similar News