சினிமா செய்திகள்

ஷைன் டாம் சாக்கோவுடன் ஏற்பட்ட மோசமான அனுபவம்- நடிகை அபர்ணா ஜோன்ஸ் ஓபன் டாக்

Published On 2025-04-24 12:34 IST   |   Update On 2025-04-24 12:34:00 IST
  • ஷைன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வாயில் இருந்து வெள்ளை நிற பொடி விழுந்ததை பார்த்தேன்.
  • அப்போது ஷைன் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான முறையில் பேசினார்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை வின்சி அலோசியஸ், படப்பிடிப்பு தளத்தில் தன்னிடமும் மற்றொரு நடிகையிடமும் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் அத்துமீறியதாகவும், இதனால் போதை பழக்கத்தில் இருக்கும் நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த நடிகர் பற்றி விவரங்களை நடிகை வின்சி அலோசியஸ், நடிகர்கள் சங்கத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகர் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்ற தகவலும் வெளியானது. இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் போதை பொருள் வியாபாரம் தொடர்பாக ஒரு நபரை தேடி போலீசார் சோதனை நடத்தியபோது, ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடினார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு வழங்கியதன்பேரில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

இந்தநிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவால் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டதாக பிரபல மலையாள நடிகை அபர்ணா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

"சூத்ர வாக்கியம்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஷைன் டாம் சாக்கோவுடன் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஷைனின் மீதான தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுகளும், படப்பிடிப்பு தளத்தில் எற்படும் வித்தியாசமான நடத்தைகளும் எனக்கு சிரமங்களை ஏற்படுத்தியது.

ஷைன் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வாயில் இருந்து வெள்ளை நிற பொடி விழுந்ததை பார்த்தேன். ஆனால் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. அப்போது ஷைன் மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமான முறையில் பேசினார்.

அதனால் நான் அவருடன் பேசும்போது தூரத்தை கடைபிடித்தேன். நான் வெளிப்படையாக ஏதாவது சொல்லியிருந்தால் ஷைன் எப்படி நடந்து கொள்வார் என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அப்போது நான் முடிந்த வரை அமைதியாக இருந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News