சினிமா செய்திகள்
அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... 'ஜெயிலர்-2' குறித்த கேள்விக்கு சந்தானம் அளித்த பதில்
- அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
சின்னத்திரையில் ஜொலித்த சந்தானம், சிம்புவின் 'மன்மதன்' படம் மூலமாக வெள்ளித்திரையில் எட்டிப் பார்த்தார். அதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கிய அவர், தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.
இதற்கிடையில் வெள்ளித்திரையில் தனக்கு அறிமுகம் தந்த சிம்பு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்-2' படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய... படம் தானே... சொல்லிட்டு தான் செய்வேன்'' என சந்தானம் தெரிவித்தார்.