"BRO CODE" பெயரை பயன்படுத்த ரவி மோகன் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி
ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திற்கு BRO CODE என்ற பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
BRO CODE என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என டெல்லி நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
டெல்லி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு எதிராக ரவி மோகன் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மன தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, BRO CODE என்ற சினிமா தலைப்பு எந்த விதத்திலும் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் வணிக சின்ன உரிமையை மீறவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரவிமோகன் ஸ்டூடியோஸ் BRO CODE என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என டெல்லி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.