சினிமா செய்திகள்
null

ஆஸ்கர் ரேஸில் பிரியங்கா சோப்ராவின் குறும்படம்.. இந்தியாவின் கடைசி நம்பிக்கை!

Published On 2025-01-24 12:06 IST   |   Update On 2025-01-24 12:16:00 IST
  • இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
  • சிறந்த அனிமேஷன் குறும்படடங்களாக தி பியூட்டிபுல் மென் உள்ளிட்டவை தேர்வாகி உள்ளன.

அமெரிக்காவின் சினமா துறையான ஹாலிவுட் இயங்கி வரும் இடமான கலிபோர்னியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் திரைப்படங்களுக்கான வருடாந்திர ஆக்ஸர் விருது விழா இரண்டு முறை ஒத்தி வைப்பட்டது.

தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 97வது ஆக்ஸர் விழா நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளுக்கான இறுதித் தேர்வு பட்டியலை ஆஸ்கர் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வாகி உள்ளது.

ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.

டெல்லியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் அனுஜா, தனது சகோதரி பாலக்குடன் பணியாற்றி வருகிறாள். வாழ்க்கையை மாற்றும் ஒரு சூழலை எதிர்கொள்ளும் போது, தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் தனது அனுஜா தனது தோள்களில் சுமத்தப்பட்டிருப்பதை அனுஜா உணர்கிறாள்.

95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்ற The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் அனோஜா படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கர் குறும்படங்கள் இறுதி பட்டியல் :

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: லெயின், அனுஜா, ஐ ஆம் நாட் ய ரோபோட், தி லாஸ்ட் ரேஞ்சர், தி மேன் ஹு குட் நாட் ரிமெயின் சைலன்ட்,

சிறந்த அனிமேஷன் குறும்படம்: தி பியூட்டிபுல் மென், இன் தி ஷேடோ ஆப் சைப்ரஸ், மேஜிக் கேன்டீஸ், வாண்டர் ஆப் தி ஒன்டர், யக்! (Yuck!)

சிறந்த ஆவணக் குறும்படம்: டெத் பை நம்பர்ஸ், ஐ ஆம் ரெடி வார்டன், இன்சிடென்ட், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆப் பீட்டிங் ஹார்ட், தி ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்டரா.

Full View

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News