சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போன பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு - காரணம் என்ன?

Published On 2025-06-03 18:08 IST   |   Update On 2025-06-03 18:08:00 IST
  • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
  • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது. ஆனால் தற்பொழுது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இப்படத்திற்கு இரண்டாம் முறை ரிலீஸ் தேதி ஒத்திவைப்பாகும். இதனால் பவன் கல்யாணின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

இந்த ஒத்திவைப்பிறகு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் பல தரப்பு கருத்துகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் முக்கியமானவை

இத்திரைப்படம் நீண்ட வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் ரத்னம் பல நபர்களிடம் ஃபைனான்ஸ் வாங்கி இப்படத்தை தயாரித்துள்ளார். பட விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன்வரவில்லை இதனால் இவர் வாங்கிய கடனை அடைத்தால் தான் படம் வெளியாகும் என சில வட்டாரங்கள் கூறுகிறது.

படத்தின் பாடல்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. படத்தின் காலதாமதத்தால் இயக்குநர் கிருஷ் படத்தைவிட்டு வெளியேறினார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை தயாரிப்பாளரின் மகனே பார்த்து கொள்கிறார். படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. திரைப்படம் இன்னும் தணிக்கை குழு சான்று பெறவில்லை. இப்படி இந்த படத்தில் பல்வேறு சிக்கல்கள் அமைந்துள்ளது.

Tags:    

Similar News