நாக சைதன்யா - ஷோபிதா திருமண நாளில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்
- திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.
- நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.
இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் குத்துச்சண்டை போட்டியில் விளையாடுகின்றனர். அப்போட்டியில் சிறுவனை தோற்கடித்து சிறுமி வெற்றி பெறுகிறார். அந்த வீடியோவிற்கு #FightLikeAGirl என்று அதாவது பெண்களை போல சண்டையிட வேண்டும் என்று சமந்தா கேப்சன் எழுதியுள்ளார்.
நாகா சைதன்யா - சோபிதா திருமண நாள் அன்று சமந்தா பகிர்ந்த வீடியோ ரசிகர்களிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.