துருவ் விக்ரம் பிறந்தநாளை ஒட்டி இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து
- துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் காளமாடன் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் முதல் சிங்கிளான தீக்கொளுத்தி பாடலும் 2-வது பாடலான றெக்க றெக்க பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் 3-வது பாடலான சீனிக்கல்லு, இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், துருவ் விக்ரம் பிறந்தநாளை ஒட்டி 'பைசன் காளமாடன்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குனர் மாறி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும். நிச்சயம் வெல்வாய் நீ. வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.