சினிமா செய்திகள்

Red Card போட்ட நேரத்துல கூப்பிட்டு மணி சார் பட வாய்ப்பு கொடுத்தார்- சிலம்பரசன்

Published On 2025-05-24 22:20 IST   |   Update On 2025-05-24 22:20:00 IST
  • விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
  • சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

சென்னையில் நடைபெற்று வரும் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் சிம்பு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஏ.ஆர்.ரகுமான் சாருடன் சிறிய வயதில் இருந்தே டிராவல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என் தந்தை படத்தை தவிர, மற்ற படத்தில் பாட முதல் முதலாக எனக்கு வாய்ப்பு கொடுத்தது ஏ.ஆர்.ரகுமான் சார். அதன்பிறகு, இதுவரை தமிழ் முதல் இந்தி வரை 150 பாடல்கள் பாடியுள்ளேன்.

விண்னைத் தாண்டி வருவாயா படத்தில் நானும், திரிஷாவும் நடித்திருந்தோம். அதன் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இந்த படத்தில் நாங்கள் இணைவதாக தகவல் வெளியான பிறகு மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உள்ளது.

என்னை வைத்து படம் எடுக்க, எல்லோரும் பயந்த சமயத்தில், பயப்படாமல் தைரியமாக, 'இந்த பையனை நம்பலாம்' என என் மீது நம்பிக்கை வைத்து என்னை அழைத்த மணி சாரை என்றும் மறக்கவே மாட்டேன்.

சினிமாவின் மாணவனாக இருந்தாலும் திறமையுள்ள மாணவனிடம் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News