சினிமா செய்திகள்

15 நாள் ஆச்சு... தைரியம் இருந்தால் DNA பரிசோதனைக்கு வாங்க கணவரே! - ஜாய் கிரிசில்டா

Published On 2025-11-20 19:09 IST   |   Update On 2025-11-20 19:09:00 IST
  • ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்.
  • மாதம்பட்டி ரங்கராஜ் இப்போ எங்க தலைமறைவா இருக்காரு

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

மேலும், "ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில், DNA பரிசோதனைக்கு வாங்க கணவரே என்று மாதம்பட்டி ரங்கராஜை கிண்டலடித்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், "என் கணவர் மாதம்பட்டி ரங்கராஜை யாராவது பார்த்தால் தயவுசெய்து DNA பரிசோதனைக்கு வர சொல்லுங்க. 15 நாள் ஆச்சு, இப்போ எங்க தலைமறைவா இருக்காரு? தைரியமும் நேர்மையும் இருந்தால் தயவுசெய்து பரிசோதனைக்கு வாங்க கணவரே" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News