சினிமா செய்திகள்
null

விஜய் ஆண்டனியின் Lawyer படத்தில் இணைந்த KGF நடிகை

Published On 2025-05-23 12:25 IST   |   Update On 2025-05-23 12:34:00 IST
  • விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
  • படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது படமான லாயர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் டைட்டிலை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் தற்பொழுது படத்தில் இந்தி நடிகையான ரவீனா டாண்டன் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ரவீனா டாண்டன் கடைசியாக கே.ஜி.ஃப் பாகம் 1 மற்றும் 2 திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News