சினிமா செய்திகள்

3 BHK திரைப்படத்தின் கனவெல்லாம் பாடல் வெளியீடு

Published On 2025-05-21 19:00 IST   |   Update On 2025-05-21 19:00:00 IST
  • 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் 3 BHK படத்தை இயக்கியுள்ளார்.
  • இப்படம் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். இப்படம் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான கனவெல்லாம் பாடல் இன்று வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

Similar News