சினிமா செய்திகள்

பிஞ்சு குழந்தை பெயரில் இன்ஸ்டா ஐடி தொடங்கி மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக பதிவிட்ட ஜாய் கிரிசில்டா

Published On 2025-11-10 17:36 IST   |   Update On 2025-11-10 17:36:00 IST
தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது பிஞ்சு குழந்தை பெயரில் இன்ஸ்டா ஐடி உருவாக்கியுள்ளார். ராகா மாதம்பட்டி ரங்கராஜ் என்ற நிற ஐடியில் இருந்து ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "அப்பா, (madhampattyrangaraj )நான்

உன் காதலில்

உன் மோகத்தில்

உன் வேகத்தில் உயிர்த்த கரு

உன் கரு

உன் உயிர்

உன் குருதி

உன் அடையாளம்!

ஆனால்

உன் அவமானமாய்

நீ உதிர்த்த சொற்கள்

காலம் கடந்தாலும்

காயம் ஆற்றாது!

புது உயிராய்

பூமியில் ஜனித்தேன்

ஒரு பாவம் அறியேன்

இப்படிக்கு

விடை வேண்டி வழக்கு தொடுத்த அப்பாவுடன் சண்டையிடும்

பிஞ்சு குழந்தை

ராகா ரங்கராஜ்

என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News