சினிமா செய்திகள்

சிம்பு படம் கைவிடப்படுகிறதா?

Published On 2025-08-01 09:09 IST   |   Update On 2025-08-01 09:09:00 IST
  • புதிய படம், வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் ‘கேங்ஸ்டர்' கதை என்று கூறப்பட்டது.
  • ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய படம், வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் 'கேங்ஸ்டர்' கதை என்றும், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் கைவிடப்பட்டுள்ளதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சம்பள விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தாலும், படத்தை தொடங்குவதில் சிம்பு முனைப்பாக செயல்பட்டு வருகிறாராம்.

Tags:    

Similar News