null
கதாநாயகன் அவதாரம் எடுத்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் சதீஷ்!
- யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த காலத்தில் பலரும் யூடியூப் , இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ் மற்றும் Influencers பலரும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலாமானவரான சதீஷ் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இவர் , மனைவி தீபா மற்றும் இவருடைய அம்மா என குடும்பமாக சேர்ந்து செய்யும் லூட்டி வீடியோஸ், கணவன் மனைவி இடையே நடக்கும் பரிதாபங்கள் வீடியோ என இவர்களின் பல வீடியோக்கள் வைரலாகியுள்ளது மேலும் இவர்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் தற்பொழுது டாட்டூ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை வேனு தேவராஜ் எழுதி இயக்கியுள்ளார். படத்தை ரென்சு மற்றும் சஞ்சு இணைந்து தயாரிக்கின்றனர். இப்படமே இந்தியாவில் முதல் ஏஐ இன்வஸ்டிகேஷன் திரில்லராக எடுக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.