சினிமா செய்திகள்
null

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி - ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பகீர் குற்றச்சாட்டு

Published On 2025-07-25 14:26 IST   |   Update On 2025-07-25 15:41:00 IST
  • திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
  • பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர்தான். இந்நிலையில் இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா அவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேரும் செய்துள்ளார்.

அதில் அவர் " "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்". இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற யூடியூபர் இலக்கியா போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்படுள்ளார். இச்செய்தி தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது.

Tags:    

Similar News