சினிமா செய்திகள்

`ஒரு வகையில் நாங்க கடவுளுக்கு நிகரானவங்க' - டேனியல் பாலாஜியின் RPM டிரெய்லர் ரிலீஸ்

Published On 2025-05-01 13:36 IST   |   Update On 2025-05-01 13:36:00 IST
  • பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
  • மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கு ஆர்.பி.எம். என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி. சுனில், சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயாபிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசை அமைத்துள்ள இப்படத்தில் தாமரை, மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுத சிட்ஸ்ரீராம் பாடி இருக்கிறார்.

மேலும் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராவேந்தர், புரோக்கன் ஆரோ என்ற ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து பாடல் எழுதி பாடி இருக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் கதைகளத்தில் படத்தை சோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பேக்கர்ஸ் மூவர்ஸ் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார் டேனியல் பாலாஜி. அவர்கள் செல்லும் வீட்டில் கொள்ளை அடிக்கும் வேலையை அந்த கம்பெனி வழக்கமாக வைத்துள்ளது. அதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் இடம் பெறுகிறது. இதுப்போன்ற சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Full View

Tags:    

Similar News