சினிமா செய்திகள்
null

நடிப்பில் கவனம் செலுத்தப்போவதால் இந்த பழக்கத்தை விடுகிறேன் - ஐஷ்வர்யா லட்சுமி எடுத்த முடிவு!

Published On 2025-09-13 13:27 IST   |   Update On 2025-09-13 13:29:00 IST
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி.

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிசியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. இவர் இந்தாண்டில் தக் லைஃப் மற்றும் மாமன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இவர் அடுத்ததாக கட்டா குஸ்தி 2, கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மலா மற்றும் பிஸ்மி ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.

இந்நிலையில் ஐஷ்வர்யா ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவர் தான் சமூக ஊடங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதில் " இந்த துறையில் பலருடன் பழகுவதற்கும் கற்றுக் கொள்ளவும் தான் இந்த சமூக ஊடகத்திற்கு வந்தேன். ஆனால் அது ஒருக்கட்டத்தில் அது என்னை கட்டுப்படுத்த தொடங்கிவிட்டது. என்னுள் இருக்கும் குழந்தைதனத்தை அது அழிக்கிறது. சிறு சிறு தருணங்களும் மகிழ்விக்க முடியவில்லை. சுய சிந்தனையையும் அது பறித்துவிட்டது" என அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News