சினிமா செய்திகள்

நடிகர் சிரஞ்சீவி

நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு

Published On 2022-11-21 06:40 IST   |   Update On 2022-11-21 06:40:00 IST
  • சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது.
  • சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டார்.

பனாஜி:

53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.

இதன் தொடக்க விழாவில் இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பெண்களிடம் இருந்து 40 சதவீத பணிகள் வெளிவருகின்றன என தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் இருந்து பட இயக்குனர்கள் வருகை தந்து தங்களது திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய திரைப்பட திருவிழாவை நாம் நடத்துகிறோம் என்பது பெருமைக்கு உரிய விஷயம் என நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார் என மத்திய மந்திரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News