சினிமா செய்திகள்

"நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா" ; பன் பட்டர் ஜாம் விழாவில் விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ

Published On 2025-07-08 15:28 IST   |   Update On 2025-07-08 15:28:00 IST
  • (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’.
  • இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. .

இந்த நிகழ்வில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசும்போது, :

"இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது.. அது கொஞ்சம் லேட் ஆனதால இதை பண்ணேன்.

இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்..எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க.என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு. ஒத்துப்பேன்.

ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு.. தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு. அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு. அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல. அவரோட ரசிகர்களை எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா" என்று பேசினார்..

Tags:    

Similar News